திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 3.81 கோடி ரூபாய் ரொக்கம் மற்றும் 1.13 கிலோ தங்கம் காணிக்கையாகக் கிடைக்கப்பெற்றுள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
புகழ்பெற்ற இந்தக் கோயிலில் தக்கார் அருள்முருகன் தலைமையில் உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றது.
இதில் கடந்த நவம்பர் மாதம் வரை 3.81 கோடி பணம் மற்றும் 1.13 கிலோ தங்கம் , 815 வெளிநாட்டு ரூபாய் நோட்டுகள் காணிக்கையாகக் கிடைக்கப் பெற்றுள்ளதாகக் கோயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
















