கோவா தீ விபத்துக்குக் காரணமான லூத்ரா சகோதரர்கள் தாய்லாந்திலிருந்து நாடு கடத்தப்பட்ட நிலையில், டெல்லி விமான நிலையத்தில் கோவா போலீசார் கைது செய்தனர்.
கோவாவின் ஆர்போரா பகுதியில் அமைந்துள்ள நைட் கிளப்பில் கடந்த வாரம் ஏற்பட்ட பயங்கரத் தீ விபத்தில் 25 பேர் உயிரிழந்தனர்.
இதனையடுத்து விடுதி உரிமையாளர்களான கெளரவ் லூத்ரா மற்றும் சவுரப் லூத்ரா ஆகிய இருவரும் விமானம் மூலம் தாய்லாந்து தப்பிச் சென்றனர்.
அவர்களைக் கண்டுபிடித்து அழைத்து வர இண்டர்போல் மூலம் ‘புளூ கார்னர்’ நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து, தாய்லாந்து போலீசாரை இந்திய அதிகாரிகள் தொடர்பு கொண்டு லூத்ரா சகோதரர்கள் இருவரையும் கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
அதனடிப்படையில், கடந்த 11ஆம் தேதி இருவரையும் தாய்லாந்து போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், இந்தியாவின் கோரிக்கையை ஏற்று, இருவரையும் தாய்லாந்து அரசு நாடு கடத்தியது. விமானம் மூலம் டெல்லி வந்த இருவரையும் கோவா போலீசார் கைது செய்தனர்.
















