அமெரிக்காவுடனான வா்த்தக ஒப்பந்த பேச்சுவாா்த்தை இறுதிக்கட்டத்தில் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய வா்த்தக துறைச் செயலா் ராஜேஷ் அகர்வால், இந்தியப் பொருள்கள் மீது அமெரிக்கா விதித்துள்ள அதிக வரிப் பிரச்னையை சரிசெய்வதற்கான வா்த்தக பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இருநாடுகளுக்கு இடையே ஒப்பந்தம் தொடா்பான கூடுதல் சுற்றுப் பேச்சுவாா்த்தை நடைபெற வாய்ப்பில்லை எனவும் கூறியுள்ளார். மேலும், இந்தியா-நியூசிலாந்து இடையே நடைபெற்றுவரும் தடையற்ற வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தை விரைவில் நிறைவடைய வாய்ப்புள்ளது என்றும் ராஜேஷ் அகர்வால் தெரிவித்துள்ளார்.
















