பெரம்பலூர் மாவட்டம், கல்பாடி பகுதியில் உள்ள கல்குவாரியில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த 500 ஜெலட்டின் குச்சிகள் மற்றும் டெட்டனேட்டர்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
கல்பாடி பகுதியில் மணிமாறன் என்பவருக்குச் சொந்தமான கல்குவாரியில், வெடிபொருட்கள் பாதுகாப்பற்ற முறையில் உள்ளதாக வருவாய் கோட்டாட்சியருக்குப் பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர்.
இதனடிப்படையில், கல்குவாரியில் ஆய்வு மேற்கொண்ட கோட்டாட்சியர் பாதுகாப்பற்ற முறையில் கீற்று கொட்டையில் வைக்கப்பட்டிருந்த 560 ஜெலட்டின் குச்சிகள் மற்றும் 10 டெட்டர்னேட்டகளைப் பறிமுதல் செய்தனர்.
மேலும், விஏஓ அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கல்குவாரி உரிமையாளர் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
















