நெல்லைக் கேடிசி நகர் மேம்பாலம் அருகே வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 25-க்கும் மேற்பட்ட பெண்கள் படுகாயமடைந்தனர்.
சிவந்திபட்டியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை முடித்துவிட்டு, 25-க்கும் மேற்பட்ட பெண்கள் வேனில் வீடு திரும்பி கொண்டிருந்தனர்.
கே.டி.சி நகர் மேம்பாலம் அருகே பயணித்த போது சாலையின் குறுக்கே வந்த மாட்டின் மீது மோதி வேன் கவிழ்ந்தது.
இதனால், வேனில் பயணித்த பெண்கள் படுகாயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடம் சென்ற போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
விபத்து காரணமாகக் கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
















