சென்னைத் திருவொற்றியூரில் விநாயகர்ச் சிலையை அவமதித்த இளைஞர்களை கைது செய்ய வேண்டுமெனப் பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
அண்ணாமலைநகர் பகுதியில் உள்ள காலி வீட்டு மனையில் இளைஞர்கள் சிலர், பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது போதையில் இருந்த இளைஞர்கள், அங்கிருந்த விநாயகர்ச் சிலை மீது முட்டை வீசியதாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாகப் போலீசிடம் புகாரளித்தும் நடவடிக்கை இல்லையென அப்பகுதி மக்கள் ஆதங்கம் தெரிவித்தனர்.
















