மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே சேதமடைந்த மூங்கில் பாலத்தை அகற்றி, புதிய பாலம் கட்டி தர வேண்டுமென கிராம மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
மார்த்தாம்பட்டினம் கிராமத்தில் “முல்லையாற்றின்” குறுக்கே தற்காலிக மூங்கில் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இப்பாலம் சேதமடைந்த நிலையில் காணப்படுவதால், கிராம மக்கள் அதன் மீது தினந்தோறும் அச்சத்துடனே கடந்து செல்கின்றனர்.
மேலும் பள்ளி செல்லும் மாணவ, மாணவிகளும் ஆபத்தான நிலையில் பாலத்தைக் கடந்து செல்கின்றனர். எனவே சேதமடைந்த மூங்கில் பாலத்தை உடனடியாக அகற்றி, புதிய பாலம் அமைத்துத் தர வேண்டுமென மாவட்ட நிர்வாகத்திற்குக் கிராம மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
















