கோவையில் ஹெல்மெட்டுக்குள் புகுந்த நாகப் பாம்பை பாம்புபிடி வீரர் லாவகமாகப் பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தார்.
கொடிசியா அருகே உள்ள வணிக வளாக வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தின் ஹெல்மெட்டுக்குள் நாகப் பாம்பு புகுந்தது.
இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த வாகன ஓட்டி பாம்புபிடி வீரருக்குத் தகவல் தெரிவித்தார். இதையடுத்து அங்கு சென்ற பாம்புபிடி வீரர், நாகப் பாம்பை லாவகமாகப் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தார்.
















