சிவகங்கை அருகே கிறிஸ்துமஸ் விழாவில் மதமாற்றம் நடைபெற்தாக கூறி போராட்டத்தில் ஈடுபட்ட இந்து அமைப்பினரைப் போலீசார் கைது செய்தனர்.
சிங்கம்புணரியில் உள்ள தனியார் எண்ணெய் ஆலையில் கடந்த 14ம் தேதி கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது. அப்போது விழாவில் பங்கேற்றவர்களை மதம் மாற்றம் செய்யும் முயற்சி நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.
இதனை அறிந்த பாஜக மற்றும் இந்து முன்னணியினர், ஆலை நிர்வாகத்தினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இந்தநிலையில் ஆலை நிர்வாகம் அளித்த புகாரின்பேரில் இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்த 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதனை அறிந்த அந்த அமைப்பினர், காவல்நிலையத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
















