ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் உள்ள பிரசித்தி பெற்ற யோக லட்சுமி நரசிம்மர் கோயிலில் சேகரிக்கப்படும் குப்பைகளை முறையாக அகற்ற வேண்டுமெனப் பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
அறநிலையத்துறை அதிகாரிகள், கோயிலில் உள்ள குப்பைகளைச் சேகரித்து மலையிலேயே கொளுத்துவதாகவும் இதனால் வனப்பகுதியில் தீ விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் அவர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
















