மாநிலங்களவையை தொடர்ந்து மக்களவையிலும் புதிய காப்பீட்டு மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.
வரும் 2047க்குள் அனைவருக்கும் காப்பீடு என்ற இலக்கை மையப்படுத்தி, காப்பீட்டுத்துறையில் மத்திய அரசு சீர்திருத்தங்களை மேற்கொண்டுள்ளது. அதன்படி காப்பீட்டுத்துறையில் 74 சதவீதமாக உள்ள அன்னிய நேரடி முதலீட்டு உச்சவரம்பை 100 சதவீதமாக உயர்த்த, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
இதையடுத்து மாநிலங்களவையில் காப்பீடு திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இதனை தொடர்ந்து மக்களவையிலும் இந்த மசோதாக தாக்கல் செய்யப்பட்டது. அப்போது எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் குரல் வாக்கெடுப்பின் மூலம் புதிய காப்பீட்டு மசோதா மக்களவையில் நிறைவேறியது.
காப்பீட்டுத் துறையில் 100 சதவீதம் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிக்கும் மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றியதை தொடர்ந்து விரைவில் குடியரசு தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்படவுள்ளது.
















