திமுக அரசின் நிர்வாகச் சீர்கேட்டால், தமிழகம் 8 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு கடனில் தத்தளிப்பதாக, மாநில பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டி உள்ளார்.
வேலூரில் பாஜக சார்பில் “தமிழகம் தலைநிமிரத் தமிழனின் பயணம்” பொதுக்கூட்டம் நடைபெற்றது.
அப்போது பேசிய நயினார் நாகேந்திரன், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற ஒருவர் கூட எதிர்ப்பு தெரிவிக்கவில்லை எனவும் நீதிக்கு தலை வணங்காத திமுக ஆட்சியை, வரும் தேர்தலில் அகற்ற வேண்டுமெனவும் தெரிவித்தார்.
தமிழகத்தில் போதைப்பொருள் பயன்பாட்டால் குற்றங்கள் அதிகரித்து வருவதாகக் குற்றம்சாட்டி அவர், அதனைத் தடுக்க காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என விமர்சித்தார்.
















