சர்வதேச தியான தினத்தை முன்னிட்டு, வரும் 21ம் தேதி 100 நாடுகளில் 33 மணி நேரம் ஒருங்கிணைந்த தியான நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இந்தியாவின் கோரிக்கையை ஏற்று, கடந்த 2014 முதல் ஜூன் 21ம் தேதியை சர்வதேச யோகா தினமாக ஐநா சபை அறிவித்தது.
இதை தொடர்ந்து, டிசம்பர் 21ம் தேதியைச் சர்வதேச தியான தினமாகக் கடைபிடிக்க கோரி, இந்தியா, இலங்கை, நேபாளம், மெக்சிகோ உள்ளிட்ட நாடுகள் ஐநா பொது சபையில் தீர்மானத்தைத் தாக்கல் செய்தன.
இதை ஏற்ற ஐநா சபை, ஆண்டுதோறும் டிசம்பர் 21ம் தேதி உலக தியான நாளாகக் கடைபிடிக்கப்படும் எனக் கடந்த ஆண்டு அறிவித்தது.
அதன்படி வரும் 21ம் தேதி உலகம் முழுவதும் தியான தினம் கொண்டாடப்பட இருக்கிறது. இதனையொட்டி உலகின் வெவ்வேறு நேரங்களின்படி, 33 மணி நேரம் தியான நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
















