தனது உயிருக்கு ஏதேனும் ஆபத்து நேரிட்டால் சிறுகளத்தூர் ஊராட்சி மன்ற தலைவர்தான் காரணம் என பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம், குன்றத்தூர் அருகே சிளகளத்தூரில் ஜூடி ஜெயந்தி என்பவர் கணவரை இழந்த நிலையில், 2 குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில், சிறுகளத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் அவரது ஆதரவாளர்களால் தொடர்ந்து அச்சுறுத்தப்படுவதாகக் கூறி தாம்பரம் காவல் துணை ஆணையர் அலுவலகத்தில் ஜூடி ஜெயந்தி புகார் மனு அளித்துள்ளார்.
ஊராட்சி மன்ற தலைவர் அரிகிருஷ்ணன் JCB இயந்திரத்தைப் பயன்படுத்தி தனது வீட்டின் முன்பு இருந்த சிமெண்ட் தளத்தை உடைத்துவிட்டதாகவும், இதனை தட்டிக்கேட்டதால் தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறியுள்ளார்.
















