உலகின் மிக உயரமான ஒற்றுமை சிலையை வடிவமைத்த சிற்பக் கலைஞரான ராம் சுதர் காலமானார்.
1925-ல் மகாராஷ்டிராவின் கோண்டூர் கிராமத்தில் ஒரு எளிய குடும்பத்தில் பிறந்த ராம் சுதர் தனது திறமையால் சிற்பக் கலைஞராக உருவெடுத்தார்.
குஜராத்தில் நர்மதா நதிக்கரையில் அமைந்துள்ள உலகிலேயே உயரமான சிலையான சர்தார் வல்லபாய் படேலின் ஒற்றுமை சிலை உள்ளிட்ட பிரமாண்ட சிலைகளை ராம் சுதர் வடிவமைத்திருந்தார்.
சிற்பக் கலைக்கு அவர் செய்த சேவைகளைப் பாராட்டி, இந்திய அரசு, 1999-ல் பத்மஸ்ரீ விருதையும், 2016-ல் பத்மபூஷண் விருதையும் வழங்கிக் கௌரவித்தது.
இந்நிலையில் உத்தரப்பிரதேசத்தின் நொய்டாவில் வயது முதிர்வு காரணமாக ராம் சுதர் காலமானார்.
















