கடந்த 7 மாதங்களில் அமெரிக்காவில் சட்டவிரோதமாக யாரும் குடியேறவில்லை என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
கிறஸ்துமஸ் பண்டிகையையொட்டி நாட்டு மக்களிடையே அமெரிக்க அதிபர் டிரம்ப் உரையாற்றினார். அப்போது, ஈரானின் முக்கிய தளங்கள் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்தியதன் மூலம் ஈரானின் அணுசக்தி அச்சுறுத்தலை அமெரிக்கா முறியடித்ததாகத் தெரிவித்தார்.
கடந்த 10 மாதங்களில் 8 போர்களை முடிவுக்குக் கொண்டு வந்ததாக மீண்டும் பெருமை பேசிய அவர், காசாவில் அமைதியை உறுதி செய்ததாகவும் கூறினார்.
அதிபராகப் பொறுப்பேற்ற நாள் முதல் தெற்கு எல்லையில் நடக்கும் ஊடுருவலைத் தடுக்க உடனடி நடவடிக்கை எடுத்ததாகவும், கடந்த ஏழு மாதங்களாக ஒரு சட்டவிரோத குடியேறியும் நாட்டிற்குள் அனுமதிக்கப்படவில்லை எனவும் குறிப்பிட்டார்.
மேலும், சுமார் 14 லட்சத்து 50 ஆயிரம் ராணுவ வீரர்களுக்குச் சிறப்புப் போர் வீரர் போனஸ் வழங்கப்படும் என்றும், ஒவ்வொரு வீரருக்கும் தலா ஆயிரத்து 776 டாலர்கள் அளிக்கப்படும் எனவும் அதிபர் டிரம்ப் அறிவித்தார்.
















