ஈரோட்டில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு கூட்டத்தில் தவெக தலைவர் விஜய் சுமார் அரை மணி நேரம் உரையாற்றினார்.
கடந்த 2024-ம் ஆண்டுக் கட்சி தொடங்கிய நடிகர் விஜய், தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டு சில மாவட்டங்களில் ரோடு ஷோ நடத்தினார்.
ஆனால், கரூரில் நடைபெற்ற ரோடு ஷோவின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
தொடர்ந்து நடிகர் விஜயின் சுற்றுப்பயணம் நாள் குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. பின்னர், விஜய் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள் அரங்கில் மக்கள் சந்திப்பு நடத்தினார்.
இதில் 2 ஆயிரம் பேருக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டது. தொடர்ந்து, புதுச்சேரியில் கடந்த 9-ம் தேதி நடந்த பொதுக்கூட்டத்தில் விஜய் பங்கேற்று தொண்டர்கள் மத்தியில் பேசினார்.
இந்த நிலையில், ஈரோடு மாவட்டம் விஜயமங்கலத்தில் விஜய்யின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
அப்போது சுமார் அரைமணி நேரம் வரை அவர் உரையாற்றினார். இதனைதொடர்ந்து விஜய்க்கு தவெக மாநில நிர்வாகக்குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் செங்கோலை வழங்கிக் கெளரவித்தார்.
















