ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே உள்ள பிரப்பன் வலசை கிராமம் மழைநீரால் சூழப்பட்டு தனித்தீவுப்போலக் காட்சியளிக்கிறது.
பிரப்பன் வலசை கிராமத்தில் 700க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில், கனமழையால் கிராமமே தனிமைப்படுத்தப்பட்டு தீவுப்போலக் காட்சியளிக்கிறது.
பிரப்பன் வலசை கால்வாய் வழியாக வேதாளை கடல் பகுதிக்குச் சென்றடைய வேண்டிய மழைநீர், ஆக்கிரமிப்பு காரணமாக ஊருக்குள்ளேயே தேங்கியுள்ளதாக மக்கள் தெரிவித்தனர்.
கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக வீடுகளிலேயே முடங்கியுள்ளதாகவும், இரவு நேரங்களில் வீடுகளில் தஞ்சமடையும் விஷ பூச்சிகளால் உறக்கமின்றி தவித்து வருவதாகவும் கூறியுள்ளனர்.
இதுகுறித்துப் பலமுறை மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்தும், இதுவரை கள ஆய்வு கூட நடத்தப்படவில்லையெனக் குற்றம்சாட்டியுள்ளனர்.
















