இந்தியாவை ஒருங்கிணைந்த சந்தையாக ஜி.எஸ்.டி மாற்றி உள்ளதாகப் பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
மஸ்கட்டில் நடைபெற்ற இந்தியா – ஓமன் வணிக உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி கலந்துகொண்டார்.
மாநாட்டில் உரையாற்றிய அவர், கடந்த 11 ஆண்டுகளில் இந்தியா தனது கொள்கைகளில் மட்டுமல்லாமல், பொருளாதாரத்திலும் நிரந்தர மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளதாகத் தெரிவித்தார்.
இந்தியாவை ஒருங்கிணைந்த சந்தையாக ஜி.எஸ்.டி மாற்றி உள்ளதாகக் குறிப்பிட்ட பிரதமர், இதன் வாயிலாக வெளிப்படைத்தன்மை அதிகரித்ததுடன் முதலீட்டாளரின் நம்பிக்கையை பெற்றிருப்பதாகவும் கூறினார்.
















