‘ஆப்ரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின் மூலம் இந்திய விமானப்படை தனது பலத்தை உலகிற்கு பறைசாற்றியதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற விமானப்படை தளபதிகள் மாநாட்டில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்றார்.
அப்போது பேசிய அவர், ஆப்ரேஷன் சிந்தூரைத் தொடர்ந்து பாகிஸ்தான் மேற்கொண்ட பொறுப்பற்ற எதிர்வினையை விமானப்படை கையாண்ட விதம் இந்தியப் படைகளின் தயார்நிலையைக் காட்டுவதாகக் கூறினார்.
இந்திய இலக்குகள் மீதான தாக்குதல் முயற்சிகளின் போது மக்கள் காட்டிய நிதானம், தங்கள் நாட்டு ஆயுதப்படைகளின் வான் பாதுகாப்புத் திறனின் மீது அவர்கள் வைத்துள்ள அசைக்க முடியாத நம்பிக்கையைப் பிரதிபலிப்பதாகப் பெருமிதம் தெரிவித்தார்.
மேலும், 21-ஆம் நூற்றாண்டின் போர்முறை என்பது வெறும் ஆயுதங்களால் மட்டும் நடப்பதல்ல என்றும், தொழில்நுட்பம் மற்றும் தகவமைப்புத் திறன் சார்ந்தது எனவும் அவர் குறிப்பிட்டார்.
















