பாகிஸ்தானில் இருந்து வெளிநாடுகளுக்கு சென்று பிச்சையெடுப்பதற்காகச் செல்ல முயன்ற 51ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தடுத்து நிறுத்தப்பட்டதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தானில் இருந்து வெளிநாடுகளுக்குச் சென்று பிச்சை எடுக்கும் கும்பல்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது சர்வதேச அளவில் அந்நாட்டிற்குப் பெரும் அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளது.
இதனைத் தடுக்கும் விதமாக நடப்பாண்டு மட்டும் வெளிநாடுகளுக்கு செல்ல முயன்ற 51 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விமான நிலையங்களிலேயே தடுத்து நிறுத்தப்பட்டனர்.
பாகிஸ்தானின் கூட்டாட்சி புலனாய்வு முகமை இயக்குநர் ஜெனரல் ரிஃபத் முக்தார் ராஜா, இது குறித்த அதிர்ச்சிகரமான தகவல்களை நாடாளுமன்றக் குழுவிடம் பகிர்ந்து கொண்டார்.
நடப்பாண்டு மட்டும் சட்டவிரோதக் குடியேற்றம் மற்றும் பிச்சை எடுக்கும் நோக்கில் வெளிநாடு செல்ல முயன்ற 51 ஆயிரம் பேர் தடுத்து நிறுத்தப்பட்டதாக அவர் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
















