பிரதமர் மோடிக்கு, ஓமன் நாட்டின் மிக உயரிய சிவில் விருது 'ஆர்டர் ஆஃப் ஓமன்!
Mar 15, 2026, 06:14 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

பிரதமர் மோடிக்கு, ஓமன் நாட்டின் மிக உயரிய சிவில் விருது ‘ஆர்டர் ஆஃப் ஓமன்!

Murugesan M by Murugesan M
Dec 18, 2025, 07:26 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிரதமர் மோடிக்கு, ஓமன் நாட்டின் மிக உயரிய சிவில் விருதான ‘ஆர்டர் ஆஃப் ஓமன்’ விருது வழங்கப்பட்டது.

இந்தியா மற்றும் ஓமன் இடையேயான ராஜதந்திர உறவுகளின் 70 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் பிரதமர் மோடி அந்நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

ஓமனில் இந்திய பள்ளிக்கல்வி முறை தொடங்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் வகையில் பிரமாண்ட நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் பங்கேற்ற பிரதமர் மோடிக்கு, ஆயிரக்கணக்கான இந்திய வம்சாவளியினர் மற்றும் மாணவர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதனைத் தொடர்ந்து மஸ்கட்டில் உள்ள அல் பராகா அரண்மனைக்குப் பிரதமர் மோடி சென்றார். அவரை, சுல்தான் ஹைதம் பின் தாரிக் அல் சையத், ஆரத்தழுவி வரவேற்றார்.

பின்னர், ஓமன் அரண்மனையில் இரு நாடுகளுக்கும் இடையிலான விரிவான பொருளாதாரக் கூட்டாண்மை ஒப்பந்தம் கையெழுத்தானது. ஓமன் சுல்தான் மற்றும் பிரதமர் மோடி முன்னிலையில், மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் ஓமன் வர்த்தக அமைச்சர் கைஸ் அல் யூசுப் ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

இந்த ஒப்பந்தத்தின் மூலம் ஓமனுக்கு ஏற்றுமதி செய்யப்படும் 98 சதவீத பொருட்களுக்குச் சுங்க வரி நீக்கப்படும். இதனால் ஜவுளி, தோல் பொருட்கள், பொறியியல் சாதனங்கள் மற்றும் மருந்துப் பொருட்களின் ஏற்றுமதி பெருமளவில் அதிகரிக்கும். மேலும், ஐடி, கல்வி மற்றும் சுகாதாரம் போன்ற 127 துறைகளில் வேலை வாய்ப்பு அதிகரிக்கும்.

இறுதியாக, இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதில் பிரதமர் மோடி ஆற்றிய பங்களிப்பைப் பாராட்டி, அவருக்கு அந்நாட்டின் மிக உயரிய சிவில் விருதான ‘ஆர்டர் ஆஃப் ஓமன்’ விருது வழங்கப்பட்டது.

இந்த விருது, இதற்கு முன் ராணி எலிசபெத், ராணி மாக்சிமா, பேரரசர் அகிஹிட்டோ, நெல்சன் மண்டேலா மற்றும் ஜோர்டான் மன்னர் அப்துல்லா ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது. இத்தகைய உயரிய சிறப்பு வாய்ந்த ஆர்டர் ஆஃப் ஓமன் விருதை பிரதமர் மோடிக்கு ஓமன் சுல்தான் ஹைதம் பின் தாரிக் வழங்கிக் கவுரவித்தார்.

இதனைத் தொடர்ந்து, பிரதமர் மோடி அங்கிருந்து புறப்பட்டார். ஓமன் சுல்தான் ஹைதம் பின் தாரிக் பிரதமர் மோடியை வழியனுப்பினார். அனைத்து அதிகாரிகளுக்கும் கைக்கொடுத்து, சுல்தானை ஆரத்தழுவி பிரதமர் மோடி ஓமனில் இருந்து விடைபெற்றார்.

Tags: PM ModinewsPrime Minister Modi has been conferred with the Order of OmanOman's highest civilian award
ShareTweetSendShare
Previous Post

இந்தியா தனது சொந்த விண்வெளி நிலையத்தை விரைவில் அமைக்கும் – பிரதமர் மோடி நம்பிக்கை!

Next Post

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றக்கோரி இளைஞர் தீக்குளித்து தற்கொலை – அண்ணாமலை இரங்கல்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

இங்கிலாந்தில் பெண்ணை உருளைக்கிழங்கு என கிண்டல் செய்த நபருக்கு 29 லட்சம் ரூபாய் அபராதம்!

வாடகைக்கு விடப்பட்ட தொழிலதிபர் ரத்தன் டாடாவின் வீடு!

ஈரான் இஸ்ரேல் போரால் கடும் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வரும் கச்சா எண்ணெய் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies