திருப்பரங்குன்றத்தில் தீபமேற்ற வலியுறுத்தி இளைஞர் உயிரிழந்த விவகாரத்தில், இறப்பிற்கான காரணம் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டுமென உயிரிழந்த முரக பக்தரின் மனைவி போலீசில் புகார் அளித்துள்ளார்.
அதில், தான் மதுரை தாமரைத் தொட்டி அருகிலுள்ள மாற்றுத்திறனாளிகள் பள்ளியில் ஆசிரியையாக பணி புரிந்து வருவதாகவும், தனது கணவரின் இறப்பு குறித்து அவரின் நண்பர் வழக்கறிஞர் சரவணன் தெரிவித்ததாகவும் கூறியுள்ளார்.
சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது தனது கணவர் உடல் எரிந்த நிலையில் கிடந்ததாகவும், அவரின் இறப்பு சம்பந்தமாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
திருப்பரங்குன்றம் மலையில் தீபமேற்ற விடாததால்தான், தன்னை எரித்துக் கொள்வதாக கூறி முருக பக்தர் பூர்ண சந்திரன் தீக்குளித்து உயிரிழந்ததாக, அவரது சகோதரர் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.
தனது சகோதரர் கடவுள் பக்தி அதிகம் கொண்டவர் என்றும், தனது நண்பருக்கு ஆடியோ அனுப்பிவிட்டு சகோதரர் உயிரிழந்தார் என்றும் அவர் கூறியுள்ளார்.
















