வள்ளுவர் கோட்டத்தில் பராசக்தி படத்தின் விழா நடப்பது சிறப்பான அனுபவம் என நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
பராசக்தி படத்தின் கண்காட்சியில் கலந்து கொண்ட அவர் படம் அனைவரையும் கவரும் விதமாக உருவாகியுள்ளதாகத் தெரிவித்தார்.
படத்தில் ஸ்ரீலீலா அளவிற்கு நடனம் ஆடும் வாய்ப்பை நடன இயக்குனர் தனக்கு வழங்கவில்லை என அவர் கிண்டலடித்தார்.
தொடர்ந்து படம் குறித்து பேசிய நடிகை ஸ்ரீலீலா 60 களில் வாழ்ந்திருந்தால், கதாபாத்திரமான ரத்தினமாலாவை போல் வாழ்ந்திருப்பேன் எனத் தெரிவித்தார்.
பின்னர் பேசிய ரவி மோகன், சிவகார்த்திகேயனின் 25 ஆவது படத்தில் நடிப்பது மகிழ்ச்சி அளிப்பதாகக் கூறினார். மேலும் பராசக்தி படத்தின் கண்காட்சி ரசிகர்களைப் பலரையும் வெகுவாகக் கவர்ந்தது.
















