கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் பணியாற்றிய ஊழியர்களுக்குச் சுமார் 312 கோடி ரூபாய் நிலுவைத் தொகையை வழங்க அமலாக்கத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
கிங்ஃபிஷர் நிறுவனத்தில் பணியாற்றிய ஊழியர்களுக்கு 300 கோடிக்கும் மேல் நிலுவைத் தொகை வழங்கப்படாமல் உள்ளது. இந்தத் தொகையை வழங்க வேண்டுமென நிறுவனத்தில் பணியாற்றிய ஊழியர்கள் நீண்ட காலமாகக் கோரிக்கை வைத்து வந்தனர்.
இந்நிலையில் சென்னை கடன் மீட்பு தீர்ப்பாயம் ஊழியர்களுக்கான நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென உத்தரவிட்டது.
பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் நிறுவனத்தின் பங்கு விற்பனையிலிருந்து பெறப்பட்ட நிதியை விடுவிக்குமாறு அமலாக்கத்துறைக்கு தீர்ப்பாயம் அறிவுறுத்தியது.
அதன் பேரில் ஊழியர்களுக்கு 312 கோடி ரூபாய் நிலுவைத் தொகையை வழங்க அமலாக்கத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இந்தத் தொகை விரைவில் வழங்கப்படும் என்றும் அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
















