உத்தராகண்ட் மாநிலம் டேராடூனில் தமிழக மாணவர்கள் சென்ற பேருந்தில் திடீரெனப் புகை வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகத்தை சேர்ந்த 40 மாணவர்கள் கல்விச் சுற்றுலாவுக்காக டேராடூன் சென்றிருந்தனர். சிம்லா பைபாஸ் சாலையில் பேருந்து சென்று கொண்டிருந்த அப்போது எதிர்பாராத விதமாக எஞ்சின் பகுதியில் இருந்து கரும்புகை வெளியேறியது.
இதையடுத்து பேருந்தில் இருந்த மாணவர்கள் கீழே இறங்கியதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. சாலையின் நடுவே பேருந்தில் இருந்து திடீரெனக் கரும்புகை வெளியேறியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
















