பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு சிறையில் மனிதாபிமானமற்ற உளவியல் சித்திரவதைகள் அளிக்கப்படுவதாக அவரது மகன்கள் காசிம் மற்றும் சுலைமான் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.
கடந்த 2023-ம் ஆண்டில் ஊழல் வழக்கில் கைதான இம்ரான்கானுக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்நிலையில், இம்ரான் கானின் மகன்கள் கடுமையான குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளனர்.
லண்டனில் வாழ்ந்து வரும் அவரது முதல் மனைவி ஜெமிமா கோல்டு ஸ்மித்தின் மகன்களான காசிம் கான் மற்றும் சுலைமான் இஸா கான் ஆகியோர், கடந்த 2 ஆண்டுகளாக இம்ரான் கான் தனிமை சிறையில் அடைக்கப்பட்டு உளவியல் ரீதியான சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாகத் தனியார் தொலைக்காட்சி நேர்காணலில் பேசிய அவர்கள், ராவல்பிண்டியில் உள்ள ஆடியாலா சிறையில், தங்கள் தந்தை மிகவும் கீழ்த்தரமாக மனிதாபிமானமற்ற முறையில் வைக்கப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டினர்.
இந்த குற்றச்சாட்டைப் பாகிஸ்தான் பிரதிநிதி முஷரஃப் சயீதி, முழுமையாக மறுத்துள்ளார்.
















