விருதுநகர் அருகே சிறுவர்கள் மீது கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்திய 4 சிறார்கள் கைது செய்யப்பட்டு கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டனர்.
ஒண்டிப்புலிநாயக்கனூரில் கஞ்சா புகைப்பதை வீட்டில் காட்டிக் கொடுத்ததாகக் கூறி 2 சிறுவர்கள் மீது கொடூர தாக்குதல் நடத்தப்பட்டது.
இதுகுறித்த வீடியோ காட்சிகள் வெளியாகி இணையத்தில் வைரலானது. இதனையடுத்து கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின் பேரில், சிறுவர்களை தாக்கியவர்கள் மீது போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
அதன் பேரில் 4 சிறார்களை கைது செய்த போலீசார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர்.
















