புதுச்சேரியில் 700 பிளாஸ்டிக் பாட்டில்களை கொண்டு அரசுப் பள்ளி மாணவர்கள் உருவாக்கியுள்ள விழிப்புணர்வு கிறிஸ்துமஸ் மரம் கவனம் பெற்றுள்ளது.
காராமணிக்குப்பம் பகுதியில் அமைந்துள்ள அரசுப் பள்ளியில், நுண்கலை ஆசிரியர் வழிகாட்டுதலின்படி மாணவர்கள் கலைநயமிக்க சிற்பங்களைச் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், கிறிஸ்துமல் பண்டிகையை முன்னிட்டு, பிளாஸ்டிக் பயன்பாடுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, மாணவர்கள் இணைந்து புதிய முயற்சி ஒன்றை மேற்கொண்டனர்.
700 பிளாஸ்டிக் பாட்டில்களை கொண்டு சுமார் 15 அடி உயரத்தில் மாணவர்கள் வடிவமைத்துள்ள விழிப்புணர்வு கிறிஸ்துமஸ் மரம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இதனை சக மாணவர்கள், ஆசிரியர்கள் ஆர்வமுடன் கண்டு சென்றனர்.
















