நமது பழமையில் ஏராளமான நன்மைகள் உண்டு என்றும், அந்தப் பழமையை தூக்கி எறிந்து விடக் கூடாது எனவும் கல்வியாளரும், ஆன்மிக இலக்கிய பேச்சாளருமான டாக்டர் சுதா சேஷய்யன் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை ஷெனாய் நகரில் உள்ள தனியார் மஹாலில் நவரச பாரதி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், கல்வியாளர் டாக்டர் சுதா சேஷையன், பாரதியாரின் எள்ளு பேரன் நிரஞ்சன் பாரதி ஆகியோர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டனர்.
அப்போது நிகழ்ச்சியில் பேசிய சுதா சேஷய்யன், பாரதியார் எழுதிய புதுமை பெண் பற்றி நாம் அனைவரும் அறிவோம் என்றும், ஆண்களுக்கு இணையாக அனைத்து பணிகளையும் பெண்கள் மேற்கொண்டு வருகிறார்கள் எனவும் தெரிவித்தார்.
பழையது என்பதற்காக அது வேண்டாம் என்ற அர்த்தம் இல்லை என்றும், புதியது என்பதற்காக எல்லாம் மறந்துவிட்டோம் என்று அர்த்தம் இல்லை எனவும் கூறினார்.
நமது பழமையில் எராளமான நன்மைகள் உள்ளதால், அதனை தூக்கி எறிந்து விடக் கூடாது எனக் குறிப்பிட்டார். மேலும், இளைஞர்கள் பாரதியாரை பின்பற்ற வேண்டும் எனவும் சுதா சேஷய்யன் கேட்டுக்கொண்டார்.
















