உத்தரபிரதேச மாநிலம் காஜிப்பூரில் உள்ள உணவகம் ஒன்றில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்ட தயிர் வடையில் எலி ஒன்று இறந்த நிலையில் கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
காஜிப்பூர் நெடுஞ்சாலையில் உள்ள சாம்ராட் தாபாவில் வாடிக்கையாளர் ஒருவர் தயிர் வடை ஆர்டர் செய்துள்ளார்.
அப்போது அவருக்கு வழங்கப்பட்ட தயிர் வடையில் இறந்த நிலையில் எலி கிடந்ததால் அதிர்ச்சியடைந்தார்.
இதையடுத்து அங்கிருந்தமற்ற வாடிக்கையாளர்களிடம் இதனை அவர் தெரிவித்த நிலையில் பலர் செல்பொனில் வீடியோவாகப் பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர்.
















