சென்னை மாவட்டத்தில் மட்டும் SIR வாக்காளர் பட்டியலில் இருந்து 14 லட்சத்து 25 ஆயிரம் பேர் நீக்கப்பட்டுள்ளனர்.
சென்னை மாவட்டத்தில் உள்ள 16 தொகுதிகளுக்கு உரிய வரைவு வாக்காளர் பட்டியலை, மாவட்டத் தேர்தல் அலுவலர் குமரகுருபரன் வெளியிட்டார். அதன்படி, வரைவு வாக்காளர் பட்டியலில் சென்னையில் மட்டும் 14 லட்சத்து 25 ஆயிரத்து 18 பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளன. இறந்தோர், இடம் பெயர்ந்தோர், இரட்டை பதிவு என மொத்தமாக சென்னையில் 14 புள்ளி 25 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
எஸ்ஐஆர் பணிக்கு முன் சென்னையில் வாக்காளர் எண்ணிக்கை சுமார் 40 லட்சமாக இருந்தது. ஆனால், எஸ்ஐஆர் பணிகள் நிறைவு பெற்ற பின், வாக்காளர்களின் எண்ணிக்கை 25 லட்சத்து 79 ஆயிரத்து 676ஆகக் குறைந்துள்ளது. அதாவது சென்னையில் சுமார் 35 புள்ளி 58 சதவீதம் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட கல்வி அலுவலர் குமரகுருபரன், இந்த 14 லட்சம் பேரில் சுமார் 2 லட்சம் பேரின் பெயர்கள் பழைய வாக்காளர் பட்டியலில் இல்லை எனவும் அவர்களுக்கு சம்மன் கொடுத்து உரிய ஆவணங்களை பெற்று வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படும் எனவும் கூறினார். மேலும் வரும் நாட்களில் புதிய வாக்காளர்களை சேர்ப்பதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெறும் என்றும், அதற்காக form எண் 6-ஐ பெற்று பூர்த்தி செய்து எளிதாக பட்டியலில் சேரலாம் என்றும் குமரகுருபரன் கூறினார்.
















