தருமபுரி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து, வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் சதீஸ் வெளியிட்டார்.
தருமபுரி மாவட்டத்தில் உள்ள பாலக்கோடு, பென்னாகரம், தருமபுரி, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் ஆகிய ஐந்து சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து, வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான சதீஸ் வெளியிட்டார். அதன்படி தருமபுரியில் மொத்தமாக 12 லட்சத்து 3 ஆயிரத்து 917 வாக்காளர்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளின் முடிவில், மொத்த வாக்காளர்களில் 6 புள்ளி 34 சதவீதம் பேர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
















