திருப்பதி – ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில்,போளூர் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என அறிவித்த ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்-க்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் நன்றி தெரிவித்துக்கொண்டார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், திருவண்ணாமலை மாவட்டம் போளூர் ரயில் நிலையத்தில் திருப்பதி – ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்ககோரி ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ்யிடம் கோரிக்கை வைத்ததாக கூறியுள்ளார்.
தனது கோரிக்கையை ஏற்று, போளூர் ரயில் நிலையத்தில் திருப்பதி – ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில் நின்று செல்லும் என்று ரயில்வே அமைச்சகம் அறிவித்திருப்பது மகிழ்சியளிப்பதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், விரைந்து நடவடிக்கை எடுத்த பிரதமர் மோடி மற்றும் அஷ்வினி வைஷ்ணவ் -க்கு தமிழக மக்கள் சார்பிலும் நன்றியை தெரிவித்துக்கொள்வதாகவும் எல்.முருகன் குறிப்பிட்டுள்ளார்.
















