கோவை மாவட்டம், அன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகாலை கடும் மூடுபனி காணப்பட்டதால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகினர்.
அன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் புகைமண்டலம் போல பனிமூட்டம் காணப்பட்டதால் காலை 8 மணி வரை பொதுமக்கள் வீட்டிற்குள்ளேயே தஞ்சமடைந்தனர். சாலைகள் தெரியாத அளவிற்கு பனிமூட்டம் சூழ்ந்ததால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.
மேலும், எதிரே வரும் வாகனங்கள் தெரிவதற்காக வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றனர்.
















