பிரதமர் மோடியுடன் உரையாடும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக 1.27 கோடி பேர் விருப்பம் தெரிவித்து விண்ணப்பித்துள்ளனர்.
மாணவ, மாணவியருக்கு பொதுத்தேர்வு குறித்த பயத்தை போக்க, பிரதமர் மோடி பங்கேற்கும் ஆலோசனை நிகழ்ச்சி கடந்த 8 ஆண்டுகளாக நடத்தப்படுகிறது.
இந்நிகழ்ச்சியில் மாணவர்கள், பெற்றோர், பொதுமக்கள் ஆகியோருடன் பிரதமர் மோடி உரையாடுவதுடன் அவர்களுக்குத் தன்னம்பிக்கை ஊட்டி வருகிறார்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கான முன்பதிவு கடந்த 1ம் தேதி முதல் தொடங்கியது. இதில் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் என இதுவரை 1.27 கோடி பேர் ஆர்வத்துடன் விண்ணப்பித்துள்ளனர்.
















