செவிலியர்களை குற்றவாளிகளை போல அடக்கி ஒடுக்க முயற்சிப்பது தான் திராவிட மாடலா? - நயினார் நாகேந்திரன் கேள்வி!
Jan 14, 2026, 04:43 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

செவிலியர்களை குற்றவாளிகளை போல அடக்கி ஒடுக்க முயற்சிப்பது தான் திராவிட மாடலா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

Murugesan M by Murugesan M
Dec 20, 2025, 08:36 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திமுக கட்சிக்கு மீண்டும் அரியணை என்பது இனி கனவிலும் கிட்டாது என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

சுயநலமற்ற சேவை புரியும் செவிலியர்களின் சாபம் திமுக அரசை இனி அரியணை ஏறவிடாது! திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளின்படி சமவேலைக்கு சம ஊதியம், பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி அறவழியில் போராடி வரும் செவிலியர்களை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இறக்கிவிடுவது, ஊரப்பாக்கத்தில் உள்ள மண்டபத்தில் அடைத்து வைப்பது என அலைக்கழிக்கும் திமுக அரசின் அராஜகப் போக்கை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

அருவருப்புடன் சிலர் விலகிச் செல்லும் நோயாளிகளையும் மனிதநேயத்துடன் முகம் சுழிக்காது தாயுள்ளத்துடன் பேணி வரும் செவிலியர்களை, ஏதோ கொலைக் குற்றவாளிகளைப் போல அடக்கி ஒடுக்க முயற்சிப்பது தான் திராவிட மாடலா? நூற்றுக்கணக்கான செவிலியப் பெண்களைப் பசி, பட்டினியுடன் அடிப்படை வசதிகளின்றி ஒரு மண்டபத்தில் அடைத்து வைப்பது தான் திமுக அரசின் ‘வெல்லும் தமிழ்ப் பெண்களுக்கான’ இலக்கணமா? என்று நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார்.

ஆட்சியே முடியப்போகிறது, ஆனால் திமுக கொடுத்த வாக்குறுதிகளை ஏன் இன்னும் நிறைவேற்றவில்லை என எந்தப் பிரிவினர் கேட்டாலும் அவர்களின் குரல்வளையை நெரிப்பது என்ன விதமான பாசிச மனநிலை? குறிப்பாக, பேச்சு வார்த்தைக்காக வரவழைத்த சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன்
தங்களை மிரட்டும் தொனியில் பேசியதாக செவிலியர் சங்க நிர்வாகிகள் தெரிவிப்பது திமுக தலைவர்களுக்கு ஆணவம் தலைக்கேறிவிட்டது என்பதைத் தான் நமக்கு உணர்த்துகிறது என்று நயினார் நாகேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

ஐந்தறிவு கொண்ட அணிலுக்கெல்லாம் பாவம் பார்க்கும் சுகாதாரத்துறை அமைச்சருக்கு, உழைக்கும் வர்க்கத்தினர் மீது கொஞ்சம் கூட இரக்கமில்லை என்பது விசித்திரமாக உள்ளது. தேர்தல் நேரத்தில் கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை அள்ளி வீசி, மக்களை ஏமாற்றி ஆட்சி அமைத்தவுடன் அதே மக்களின் மீது அடக்குமுறையை ஏவும் திமுக எனும் ஏமாற்றுக்கார கட்சிக்கு மீண்டும் அரியணை என்பது இனி கனவிலும் கிட்டாது என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்

Tags: newsDMKநயினார் நாகேந்திரன் கேள்விIs it the Dravidian model to try to suppress nurses like murderers? - Nayinar Nagendran questions
ShareTweetSendShare
Previous Post

கொழுந்துவிட்டு எரியும் வன்முறை : தீக்கிரையான வங்க தேசம் – இந்திய தூதரகம் முற்றுகை!

Next Post

அமெரிக்காவை கலங்கடிக்கும் Epstein Files!

Related News

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

Load More

அண்மைச் செய்திகள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies