விழுப்புரத்தில் பழமை வாய்ந்த ஆஞ்சநேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழாவினை முன்னிட்டு சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.
ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டு, ஆயிரத்து எட்டு வடை மாலை சாத்தப்பட்டது.
பின்னர், தங்க கவசம் பொருத்தபட்ட ஆஞ்சநேயரை, பக்தர்கள் கண்குளிர தரிசித்தனர். இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
















