சபரிமலை கோயிலின் தங்க கவச முறைகேடு வழக்கில் சென்னையை சேர்ந்த தனியார் நிறுவனத்தின் சிஇஓ உட்பட இருவரை சிறப்பு புலனாய்வு குழுவினர் கைது செய்தனர்.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் துவாரபாலகா் மற்றும் கருவறை கதவுகளின் தங்கக் கவசங்களில் உள்ள தங்கம் திருடப்பட்ட வழக்கில் பெங்களூரு தொழிலதிபா் உண்ணிகிருஷ்ணன், தேவஸ்வம் வாரிய முன்னாள் தலைவா்கள் உள்ளிட்ட 7 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் கவசங்களை புதுப்பித்ததில் சென்னையை சேர்ந்த ஸ்மாா்ட் கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் ஈடுபாடு இருந்தது சிறப்பு புலனாய்வு விசாரணையில் தெரியவந்தது.
அதன் பேரில் சென்னை வந்த குழுவினர் நிறுவனத்தின் சிஇஓ பங்கஜ் பண்டாரி மற்றும் பெங்களூரை சேர்ந்த தொழிலதிபர் கோவா்தன் ஆகியோரை கைது செய்தனர். இதனால் தங்க கவச முறைகேடு வழக்கில் கைது எண்ணிக்கை 9 ஆக உயர்ந்தது.
















