கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே கார் டயர் வெடித்து தாறுமாறாக ஓடியதில் 5 வாகனங்கள் அடுத்தடுத்து மோதிக் கொண்டன.
சென்னையில் இருந்து காரைக்குடி நோக்கிச் சென்றுகொண்டிருந்த கார், உளுந்தூர்பேட்டை அருகே டயர் வெடித்து தாறுமாறாக ஓடியது.
தடுப்பில் மோதிய கார், எதிர்திசையில் உள்ள சாலையில் நின்றதால் பின்னால் வந்து கொண்டிருந்த 5 வாகனங்கள் அடுத்தடுத்து மோதிக் கொண்டன. 3 கார்கள் மற்றும் 2 லாரிகள் அடுத்தடுத்து மோதியதில் 5 பேர் படுகாயமடைந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
















