திருத்தணி அருகே இன்சூரன்ஸ் பணத்தைப் பெறுவதற்காகத் தன் தந்தையையே விஷப் பாம்பை ஏவிக் கொலை செய்த 2 மகன்கள் உட்பட 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம், பொதட்டூர்பேட்டை நல்ல தண்ணீர்குளத்தை சேர்ந்தவர் கணேசன், இவர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் ஆய்வக உதவியாளராகப் பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த கணேசனை கட்டுவிரியன் பாம்பு கடித்து உயிரிழந்து விட்டதாக அவர்களது மகன்கள் காப்பீட்டு நிறுவனத்தில் தெரிவித்துள்ளனர்.
இதனால் சந்தேகமடைந்த இன்சூரன்ஸ் நிறுவனம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் நடத்தப்பட்ட விசாரணையில் இன்சூரன்ஸ் பணத்திற்காகத் தந்தையை விஷம் பாம்பை ஏவிக் கொன்றது தெரியவந்தது.
















