வங்கதேசத்தில் உஸ்மானின் மரணத்திற்கு நீதி கேட்டு நடைபெற்ற போராட்டத்தில் இந்து இளைஞரைக் கொலை செய்து, சாலையில் தீயிட்டு எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வங்கதேசத்தில் மைமன்சிங் நகரை சேர்ந்த திபு சந்திரதாஸ் என்ற இளைஞர் துணி தொழிற்சாலை ஒன்றில் வேலை செய்து வந்திருக்கிறார்.
அவர், மத நிந்தனை செய்து விட்டார் என கூறி அவருடைய ஆடைகளை களைந்து, நிர்வாணப்படுத்தி, ஒரு கும்பல் தொங்க விட்டுள்ளது.
பின்னர் கம்பத்தில் கட்டிவைத்து, அடித்துக் கொலை செய்தது. இதன் பின்னர் அவருடைய உடலைத் தீ வைத்து எரித்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.
இந்தச் சம்பவத்திற்கு ஆளும் இடைக்கால அரசு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. இதேபோன்று இம்தாதுல் ஹக் மிலோன் என்ற பத்திரிகையாளர், குல்னா பகுதியில் மர்ம நபர்களால் சுட்டு கொல்லப்பட்டார்.
வன்முறை கும்பல், தி டெய்லி ஸ்டார் மற்றும் புரோதம் ஆலோ ஆகிய இரு பத்திரிகை அலுவலகத்திற்குள் புகுந்து சூறையாடியது. பத்திரிகை வளாகத்தில் தீ வைத்து கொளுத்திவிட்டு தப்பி சென்றது.
















