நாமக்கல் கிழக்கு மாவட்ட தவெக நிர்வாகியான செந்தில்நாதன், பெண் நிர்வாகி வீட்டில் பிடிபட்ட வீடியோ வைரலாகி வருகிறது.
நாமக்கல் கிழக்கு மாவட்ட தவெக செயலாளராக இருப்பவர் செந்தில்நாதன். இவர், கூட்டப்பள்ளி பகுதியில் உள்ள பெண் நிர்வாகி ஒருவரது வீட்டிக்குள் சென்று கதவை பூட்டியுள்ளார்.
இதுகுறித்து அறிந்த பெண்ணின் உறவினர்கள், கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றனர்.
அப்போது, அந்தப் பெண்ணுடன் செந்தில்நாதன் இருப்பதை கண்ட உறவினர்கள், சம்மந்தப்பட்ட பெண்ணை சரமாரியாகத் தாக்கினர்.
இதுதொடர்பான வீடியோ காட்சிகள் வெளியான நிலையில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
















