திருப்பரங்குன்றம் மலைமேல் உள்ள தர்காவிற்கு 4 பேர் சென்றதை கண்டித்து காவல்துறையினருடன் மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
திருப்பரங்குன்றம் தீபத்தூணிவில் தீபம் ஏற்றுவது தொடர்பாக, உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதனால், திருப்பரங்குன்றம் மலைக்கு செல்லக் காவல்துறை தடை விதித்துள்ளது.
இதனிடையே, மலை மேல் உள்ள தர்காவில் சந்தனக்கூடு விழா நடத்த அனுமதி வழங்கப்பட்டதால், முன்னேற்பாடு பணிகளை செய்வதற்காக 4 பேர் மலைக்கு மேல் சென்றனர்.
இதனால் ஆத்திரமடைந்த கோட்டை தெரு மக்கள், தங்களுக்கும் அனுமதி வழங்கக் கோரி போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல் ஆய்வாளர் ராஜதுரை, உதவி ஆணையர் சசி பிரியா ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
















