இத்தாலியில் 20 கோடி ஆண்டுகள் பழமையான டைனோசர் கால்தடங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
டைனோசர் குறித்து உலகின் பல்வேறு நாடுகளிலும் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
அந்தவகையில் இத்தாலியின் ஸ்டெல்வியோ தேசியப் பூங்காவிலும் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.
கடல் மட்டத்திலிருந்து 2 ஆயிரம் மீட்டர் உயரம் கொண்ட செங்குத்தான பாறை ஒன்றில் டைனோசரின் கால்தடங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் வரை கால்தடங்கள் பதிந்திருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். சில கால் தடங்கள் 40 செண்டி மீட்டர் அகலம் கொண்டவையாக இருப்பதாகவும் கூறியுள்ளனர்.
35 ஆண்டுகளில் கண்டிராத தடங்களாக அவை இருப்பதாகவும் ஆராய்ச்சியாளர் குறிப்பிட்டுள்ளனர்.
20 கோடி ஆண்டுகளுக்கு முன் புவியில் வாழ்ந்த தாவரங்களை உண்ணும் பிலெட்டியோசாரஸ் வகை டைனோசரின் கால்தடங்களாக அவை இருக்கலாம் என்றும் ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.
















