ஆந்திராவில் ரயிலில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படும் தம்பதி, இறப்புக்கு முன் சண்டையிட்டுக்கொண்ட வீடியோ காட்சி வெளியாகி உள்ளது.
ராவு பள்ளி கிராமத்தை சேர்ந்த கொரடா சிங்காசலம் என்பவர், அதே கிராமத்தை சேர்ந்த பவானி என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். இவர்கள் கடந்த இரு தினங்களுகு முன்பு ரயிலில் உறவினர் வீட்டிற்கு சென்றுக்கொண்டிருந்தனர்.
அப்போது கணவன், மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ரயில் கதவின் அருகே நின்று வாக்குவாதம் செய்த தம்பதி சிறிது நேரத்திலேயே கீழே விழுந்து உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், இருவரும் ரயிலில் இருந்து கீழே விழுவதற்கு முன் சண்டையிட்டுக்கொண்ட வீடியோ வெளியாகி இணையத்தில் பரவி வருகிறது.
இந்த சம்பவம் கொலையா? தற்கொலையா? அல்லது விபத்தா? என்ற கோணங்களில் போலீசார் விசாரணையை தீவிரபடுத்தியுள்ளனர்.
















