சென்னையில் வாக்காளர் பெயர் சேர்த்தல், திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம் 2வது நாளாக நடைபெறுகிறது.
தமிழகத்தில் எஸ்ஐஆர் பணி நிறைவடைந்த நிலையில், வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது. அதில், மாநிலம் முழுவதும் மொத்தம் 97 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர்.
அதிகபட்சமாக, சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட 16 சட்டப்பேரவைத் தொகுதிகளில் இருந்து 14லட்சத்து 25 ஆயிரம் பேர் நீக்கப்பட்டுள்ளனர். இதில், ஒருலட்சத்து 56 ஆயிரம் பேர் மட்டும் இறந்தவர்கள் பட்டியலில் உள்ளனர்.பெரும்பாலானோர் தொகுதி மாறியவர்களாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
வாக்காளர் பெயர் சேர்த்தல், திருத்தம், நீக்கம் தொடர்பாக சிறப்பு முகாம் சென்னை மாநகராட்சி சாா்பில் சனிக்கிழமை அனைத்துப் பாகங்களிலும் நடைபெற்றது.
வார்டு வாக்காளர் பதிவு அலுவலகங்கள், வாக்குச்சாவடி மையங்கள் என மூன்றாயிரத்து 718 இடங்களில் இந்த முகாம்கள் நடைபெற்றன. இந்நிலையில், 2வது நாளாக வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
















