ஹிந்து மதத்தை அழிப்பேன் என கூறிய ஹிந்து விரோதி உதயநிதி என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா விமர்சித்துள்ளார்.
திருப்பரங்குன்றத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காசி விஸ்வநாதர் கோயிலுக்கு 21 நாட்களாக இந்துக்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை என தெரிவித்தார்.
திமுக அரசாங்கத்துக்கான கொள்ளிக் கட்டை உதயநிதி தான் என்றும், 2026 தேர்தலில் திமுக அரசுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் என்றும் அவர் கூறினார். அறநிலையத்துறை கோயில் சொத்துக்களை கொள்ளையடிப்பதாகவும் அவர் சாடினார்.
















