வரும் 24-ம் தேதி அமெரிக்க செயற்கை கோள் விண்ணில் பாயவுள்ள நிலையில் இஸ்ரோ குழுவினர் திருப்பதியில் வழிபாடு நடத்தினர்.
அமெரிக்காவை சேர்ந்த ஏ.எஸ்.டி., நிறுவனம், தகவல் தொடர்பு சேவைக்காக, 6,500 கிலோ எடையில், புளூபேர்ட் செயற்கைக்கோளை உருவாக்கி உள்ளது.
இது தொலைதுார கிராமங்களுக்கு மொபைல் போன், அதிவேக இணையதள சேவைகளை வழங்க உதவும்.
இதனை வரும் 24-ம் தேதி காலை 8.54 மணிக்கு எல்.வி.எம் – 3 ராக்கெட் மூலம் இஸ்ரோ விண்ணில் செலுத்துகிறது.
இந்நிலையில் திட்டம் வெற்றி பெற, இஸ்ரோ தலைவர் நாராயணன் திருப்பதியில் வழிபாடு நடத்தினார். தேவஸ்தான அதிகாரிகள் அவருக்குப் பிரசாதம் வழங்கினர்.
















