மின்னும் நட்சத்திரங்களுடன், கட மான்கள் பூட்டிய வண்டியில் வானில் வலம் வந்து கிறிஸ்துமஸ் தாத்தா பரிசுகளை கொடுத்த காலம் எல்லாம் மலையேறி விட்டது என்பது போன்ற ஒரு சம்பவம் கௌதமாலா தலைநகரில் நடந்துள்ளது.
கிறிஸ்துமஸ் தினம் நெருங்குவதையொட்டி நடந்த நிகழ்ச்சியில், தீயணைப்பு வீரர் ஒருவர் கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்து, உயரமான பாலத்தில் இருந்து சூப்பர் ஹீரோ போல் கயிற்றில் சறுக்கிக் கொண்டு கீழே வந்தார்.
அதனைத் தொடர்ந்து தீயணைப்புது துறை சார்பில் சிறுவர், சிறுமிகளுக்கு அவர்களுக்குப் பிடித்தமான பொம்மைகளை பரிசாக வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து அங்கிருந்தவர்கள் பலரும் கிறிஸ்துமஸ் தாத்தாவுடன் செல்ஃபி எடுத்துத் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
















